கண்ணீர் சிறகுகள்

காய்ந்து கருகிய ஊரணிக்கரை ஒற்றைப் பனைமரத்தை முதல் முறையாக முழுமையும் தழுவிக் கொண்டே வந்து சரிந்தது அதன் கடைசித் தோகை. நிலத்திடமிருந்து எதையோ பறிப்பதாக நினைத்துக்கொண்டே தோகையை எடுத்த சிகப்பி மெதுவாக தூக்கி நிறுத்தினாள் தலைக்கு மேல். 'உன்னை மறைத்து விட்டேன் பார்' என்பது போல சூரியனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே குதித்தாள். ஆயத்தமானது ஆகாயம் ஆடுகிறது ஒரு மயில் என நினைத்து. படம் - ஹென்க் ஒச்சப்பன்