கடைசி விவசாயி - ஒரு பண்பாட்டின் மழைப்பாடல்!

இந்தப்படத்தை எடுப்பதற்கெல்லாம் பெரும் துணிச்சல் வேண்டும் என்ற மொண்ணைத்தனமான பாராட்டை இயக்குனருக்கு அளித்தால் அது தான் இந்தப் படைப்புக்கு செய்யும் முதல் இழுக்கு. காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை என பிறிதொன்றிலாத படைப்பூக்கம் மிகுந்த படங்களின் வழியாக தமிழ் திரையுலகில் முட்களின் நடுவே ஒரு ஒற்றையடிப்பாதையை உருவாக்கி வைத்திருக்கிறார் மணிகண்டன். அந்தப்பாதை அவருக்களித்த தன்னிகரில்லா தன்னம்பிக்கையும், தமிழ்த்திரையுலகில் விரிந்து கிடக்கும் தார்ச்சாலைகள் ஏற்படுத்திய சலிப்பினாலும், மலினங்களினாலும் அவர் கடைசி விவசாயியை படைத்திருக்கிறார். அந்த ஒற்றையடிப்பாதையின் முன் நீண்டு கிடக்கும் ஒரு நெடுங்கோட்டை வரைந்து அந்த பாதையின் போக்குக்கு ஒளி படர்த்தியவர் பாலுமகேந்திரா. இப்போது இந்த படத்தின் வழியாக அந்த கோட்டை மணிகண்டன் தொட்டு விட்டார் என்றே உணர்கிறேன். கடைசி விவசாயி ஒரு பண்பாட்டின் விழுமியங்களை தளராமல் தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஆன்மாவின் முனகல். அந்தப் பண்பாட்டின் மனிதர்கள் இன்றி, அவர்களின் பூமி இன்றி, அவர்களின் வாழ்க்கை இன்றி இந்தப்படைப்பு சாத்தியமில்லை. படத்தில் எனக்கு தாளாத பிரமிப்பை ஏ...