Posts

Showing posts from August 4, 2024

உள்ளொழுக்கு - திறந்தெழும் ஒளி

Image
  மனிதனின் பலவீனத்தையும், அக இருளையும் தீரமான படிமக் காட்சிகளுடன் படமாக்கும் மலையாள சினிமாவின் மற்றுமொரு படைப்பு - உள்ளொழுக்கு (Ullozhukku) காதலுக்கு பெற்றோரிடமிருந்த எதிர்ப்பால் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட பார்வதிக்கும் (அஞ்சு), புற்றுநோய் பாதிப்புக்குள்ளான மகனின் மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்காக அஞ்சுவை மருமகளாக்கிய ஊர்வசிக்குமான (லீலாம்மா) உள ஊடாட்டம் தான் படம்.  இறக்கும் கணவனுக்கு ஈடாக அஞ்சுவை பின்தொடரும் முன்காதலும், மகனின் உயிரியல் தொடர்ச்சிக்காக மருமகளை பற்றியிழுக்கும் லீலாம்மாவும் இந்தப் படத்தில் இருமுனை கூர்கொண்ட கத்திகள். அந்தக்கூர்மை தத்தமது உறைகளையும் தாண்டி சதையை கிழிக்கும் அசாதரணத் தன்மை கொண்டவை. "உங்க நல்லதுக்குத் தான்" என்ற சாயலில் குடும்பங்கள் தன்னளவில் கொண்ட 'திருமண அதிகாரம்' மூலம் பிள்ளைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையும், அதன் வழியே மனிதர்களுக்குள் இயல்பாக வளரும் மீறலும், கபடங்களும் அசலான காட்சியாக்கங்கள்.   இறந்து போன அஞ்சுவின் கணவனின் உடலை அடக்கம் செய்வதற்கு இடையூறாக படம் முழுவதும் நீடிக்கும் மழை - காலத்தின் மனசாட்சி போல தோன்றுகிறது. அ...