மாரீசன் - அமைதியும், அலைக்கழிப்பும்
மாரீசன் படத்தில் நான் வியக்கும் முதல் அம்சமே வடிவேலு என்னும் நடிகனுக்குள் இருக்கும் கலைஞனின் முதிர்வு தான். உண்மையில் அது மிகப் பூடகமானது. கூர்மையான அவதானிப்பின் மூலமே அறிய முடிவது. அவரிடம் வெளிப்படும் இந்த புதிய பரிமாணத்திற்காகவே, நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு தமிழ்ப்படத்தை மீண்டும் பார்க்கத் தோன்றுகிறது. வடிவேலு அடிப்படையில் தெக்கத்தி பகடியுணர்வின் முகம். அவ்வகையில், காமெடியனாக மட்டும் நமக்குள் பதிந்திருந்த அவருடைய பாவனைகளில் பெரும்பாலும் நாடக அம்சங்களையே பார்க்க முடியும். ஆனால், இந்தப் படத்திலிருக்கும் வடிவேலு முற்றிலும் வேறானவர். வெறும் உடல் வயதினால் ஏற்பட்ட முதிர்வு மட்டுமல்ல இது. அகவயமாகவே இதுவரை நாம் பார்த்திராத உயரத்திற்கு வந்திருக்கிறார். தமிழ்த்திரையில் சிவாஜி, கமல், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் போன்று அரிதான சில நடிகர்களிடம் மட்டுமே நான் உணரக்கூடிய ஒரு படிநிலையை வடிவேலுவிடமும் இப்போது காண்கிறேன். இம்சை அரசன் படத்தில் உக்கிரபுத்தனாக அவர் அப்போதே இந்த புள்ளியை நோக்கி நகர்ந்திருக்கிறார். ஆனால், நாம் தான் அவரை சரியாக பயன்படுத்தவில்லையோ என நினைக்கிறேன். மாமன்னன் ...