காதல் The core - உடனிருத்தல் எனும் பெருவழிப்பாதை!

"இதயத்தில் அல்ல, மேல் உதட்டில் இருந்து வரும் காய்ந்த முத்தங்களை வைத்து தமிழ்நாட்டில் ஒரு பெண்ணுடன் 50 வருடம் தாம்பத்யம் நடத்தி விட முடியும்" என ஜி.நாகராஜன் சொன்னது ஆண் பெண் திருமண உறவு குறித்து சராசரி சமூகத்தின் நினைவுகளாக மாறிவிட்ட புறவியல் எச்சத்தின் வெளிப்பாடு. "20 வருடம் வாழ்ந்து விட்ட பிறகு எதற்கு விவாகரத்து?" என மேத்யூவின் மனைவி ஓமனாவின் முன்பு வைக்கப்பட்ட கேள்வியும் அதற்கான விடைகளும், விடை வழியாக குடும்பத்திலும், சமூகத்திலும் நிகழும் ஏற்பின் நுண்மையான ஆக்கமே "காதல் - The core" திரைப்படம். The Great Indian kitchen படத்தை இயக்கிய ஜியோ பேபியின் மற்றுமொரு ஆழமான படைப்பு இது. மேத்யூவாக மம்மூட்டி, ஓமனாவாக ஜோதிகா. இருவருக்கும் திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகளுக்குரிய இயல்பான இடைவெளிகள் போல சாதாரணமானது அல்ல இவர்களுக்கிடையே உள்ள இடைவெளி. சமையலறை முதல் படுக்கையறை வரை படம் முழுக்க இருவருக்குமிடையே கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிச்சுவர் ஒன்று இருக்கிறது. அது இருவரும் உடைக்க இயலாத, உடைக்க விரும்பாத ஒன்றாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதே போன்றதொரு சுவரே ...