காதலுக்கும் நட்புக்கும் இடையில்...
அவளுக்கொரு காதலனும் அவனுக்கொரு காதலியும் இருக்கும் போது அவர்கள் இருவரும் பழக நேர்ந்தது. இருவருக்கும் ஓரளவு கவிதை எழுத தெரியும். ஒருவருக்கொருவர் பாராட்டி ரசித்துக் கொண்டார்கள். அவனுடைய மூக்குக் கண்ணாடி அழகாக இருக்கிறதென்றாள். எப்போதும் அணிந்து கொள்ள ஆசைப்பட்டான். அவள் கொலுசு சத்தம் இசையாக இருக்கிறதென்றான். அவனைச்சுற்றி நடந்து கொண்டே இருந்தாள். தாடி வைத்தால் ஸ்மார்ட்டாக இருக்கும் என்றாள். அடிக்கடி ஷேவிங் செய்தான். ஈரத் தலையும், மல்லிகைப் பூவும், சந்தன பொட்டும் பிடித்திருக்கிறதென்றான். வாரம் நான்கு நாட்களுக்கேணும் வைத்துக்கொள்ள பிரயத்தனப்பட்டாள். இருவருக்கும் ஒரே செல்லப்பெயர் வைத்துக்கொண்டார்கள். இருவருக்குள்ளும் பரிசுத்தமான நட்பொன்று மலர்ந்திருப்பதாக நம்பினார்கள். "காற்றே பூங்காற்றே..." பாடலை அவள் பரிந்துரைத்தாள். "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." பாடலை அவன் பரிந்துரைத்தான். அவள் பிறந்தநாளுக்கு காதல் கவிதை புத்தகத்தை பரிசளித்தான். முதல் செல்ஃபி போட்டோவில் இருவரும் அழகாக இருப்பதாக புளகாங்கிதம் அடைந்தார்கள். முதல் முறையாக முத்தமிட்டுக் கொண்டார்க...