Posts

Showing posts from October, 2024

பெருநிலைப் பயணம்

Image
ஒரு மலையுச்சியில் இருந்து இன்னொரு மலையுச்சியை காணும் பொன் கனவு ஒன்று வாய்க்கப்பெற்றேன். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு சிறு பயணம் கொங்கர் புளியங்குளம் மலைக்கு. மதுரையின் காலாதீத உலகாக அதன் திக்கெங்கும் பேருருக் கொண்டு நிற்கும் எண்பெருங்குன்றங்களில் ஒன்று இது. தமிழ்நாட்டில் சமண சமயம் நுழைந்து அது முதன்முதலில் நிலைபெற இயற்கையின் கருணைக் குடையாகியவை பாண்டியத் தலைநகரின் குன்றுகளே. அவற்றில், சமண மலை, அரிட்டாபட்டி, யானைமலை, திருப்பரங்குன்றம் மலைகளிலிருந்த சமணர் வாழ்விடங்களை இதுவரை காண்பதற்கான வழிகளை 'பசுமை நடை' அமைப்பு உருவாக்கித் தந்தது. இது எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் - நண்பர்களால் 15 ஆண்டுகளாக ஒருங்கிணைக்கப்படுவது.  மதுரை சார்ந்த அடிப்படை வரலாற்றுணர்வை அடைவதற்கான எளிய வாசல். தனிப்பட்ட முறையில் பசுமை நடை எனக்கு ஒரு செயலூக்கி போன்றது. வீட்டிலிருந்து மாதம் ஒரு முறையேனும் வெளியே கிளம்பி செல்வதற்கான கூவல் அங்கிருந்து வருகிறது. எதிர்மறை சூழல் கொண்ட அன்றாடங்களுக்கு மாற்றாக முழுக்க நேர்மறையான சில மணி நேரங்களை தருகின்றது. குழந்தைகளுடன் உரையாடி அவர்களுலகில் நுழைவதற்கான சாத்தியமளிக்கிறது...