Posts

Showing posts from September, 2025

'அருள்மிகு' கதையனுபவம்

Image
நண்பர் ரகுநாத் தனது முதல் சிறுகதை தொகுப்பான 'அருள்மிகு' மூலம் புனைவுலகு நோக்கிய தனது சாளரத்தை திறந்திருக்கிறார். அதற்காகவே அவருக்கு எனது இதமான தழுவல்கள். கீழக்குயில்குடி மலை அடிவாரத்தில் ஒரு தேநீர்ப் பொழுதில் தன்னுடைய சிறுகதை தொகுப்பு குறித்து அவர் முதல்முறையாக என்னிடம் பகிர்ந்து கொண்ட கணம் நிகழ்ந்த அதே இமை விரிவுடனேயே இந்த தொகுப்பை முழுமையாக படித்து முடித்தேன். எப்போதும் அவரிடம் நானுணரும் எள்ளலும், துடிப்பும் மிகுந்த அந்த கள்ளமின்மையின் சாரத்தை எல்லா கதைகளிலும் காண முடிந்தது. சமூகத்தின் இடுக்குகளில் பொருக்கோடிப் போன நூற்றாண்டுகளின் கறைகளை சுரண்ட முற்படும் பொருட்டு தன்னுடைய கதைகளை பகடித் தன்மையுடன் அவர் அணுகியிருக்கும் விதம் மாறுபட்டதொரு வாசிப்பனுபவம். தமிழ்ப் பண்பாட்டின் வேர்களில் வைதீகம் செலுத்திய ஆதிக்கத்தை கேள்விக்குட்படுத்துதல், எளிய மக்களிடம் இயங்கும் சாதி, மதம் சார்ந்த உளவியல் சிடுக்குகளை ஆராய்தல், பாலின சமநிலையின்மையும், பெண்ணுரிமையையும் பிரக்ஞைப் பூர்வமாக அணுகுதல் என பல நுட்பமான கருக்களை எளிய மொழியில் தன் பெரும்பாலான கதைகளின் மையங்களாக்கியிருக்கிறார். மனித ...