Laapataa Ladies - மீள்வதற்காகவே தொலைந்தவர்கள்
மழை ஓய்ந்த பின்னர் இலைகளிலிருந்து சொட்டிக்கொண்டிருக்கும் நீர்த்துளிகள் போல அரிதாக சில திரைப்படங்கள் எடையற்ற எடையாக நினைவில் அசைந்து கொண்டிருக்கும். அப்படியானதொரு படம் - லாபடா லேடீஸ் (தொலைந்த பெண்கள்) காதலும் கள்ளமின்மையும் கொண்ட தீபக்கும், கர்வமும் சூதும் கொண்ட பிரதீப்பும் திருமணம் முடித்து அவரவர் மனைவியரோடு ஒரே ரயிலில் அருகருகே இருக்கையில் அமர்ந்து பயணிக்கிறார்கள். இருவரின் மனைவிகளும் ஒரே மாதிரியான நிறத்தோற்றத்தில் முகத்தை மறைத்து முக்காடிட்ட உடையணிந்திருக்கிறார்கள். அதனால் தன் மனைவியென நினைத்து பிரதீப்பின் மனைவி ஜெயாவை அழைத்துக் கொண்டு தன்னுடைய நிறுத்தத்தில் இறங்கி விடுகிறான் தீபக். பின்னர், தன்னுடைய நிறுத்தத்தில் பிரதீப் இறங்குகையில் தான் அருகே உறங்கிக் கொண்டிருந்த ஃபூல் குமாரி தன்னுடைய மனைவியல்ல என்பது தெரிய வருகிறது. கதையாக இந்த தருணம் மிக சுவாரஸ்யமான ஒரு முடிச்சு. தன் கணவனின் பெயரை கூட சொல்லத் தயங்கும் ஆசாரப்பிண்ணனி கொண்ட குடும்பப் பெண்ணாக, வெறும் வீட்டு வேலைகளுக்கு மட்டுமே பழக்கப்படுத்தப்பட்ட ஃபூல் குமாரி நிர்கதியாக ரயில் நிலையத்தில் நிற்பதும்; அழைத்து செல்வது தன் கணவனல்ல எனத்தெ...