Posts

Showing posts from November, 2026

அவர்கள் மட்டுமா திருடினார்கள்?

Image
மதுரை நகைக்கடை திருட்டு சம்பவத்தின் பின்னால் நாம் கவனிக்க தவறிய மிக முக்கியமான சிக்கல்கள் இருக்கின்றன. இந்த சம்பவத்தை மேலோட்டமாக நிஷாந்த் - மீனாட்சியின் வளர்ப்பு பிழையாகவும், ஆடம்பர நோக்கமாகவும், குற்றப் பழக்கமாகவும், சாகசச் செயலாகவும் புரிந்து கொள்கிறோம். உண்மையில் இது தனிப்பட்ட இருவர் மட்டும் சார்ந்த சிக்கல் அல்ல. பெரும்பாலான Gen Z தலைமுறையின் உள நிலையோடு தொடர்புடையது.  நிஷாந்த் - மீனாட்சி இருவரும் தாங்கள் ஒன்றாக படித்த B.A French பட்டப்படிப்பை பாதியில் விட்டிருக்கிறார்கள். மீனாட்சியும் அவரது அம்மா இந்துவும் தனித்தனி instagram account மூலமாக Influencing செய்து வந்துள்ளார்கள். இவர்கள் இருவருக்கும் கேமரா & எடிட்டிங் வேலை செய்திருக்கிறார் நிஷாந்த். இவரும் தனியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உயர்ரக பைக்கில் சுற்றுலா சென்று ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு வந்துள்ளார். கல்லூரி படிப்பை கைவிட்ட பின்னர் ஒரு கடையில் சில மாதம் பணியாற்றிவிட்டு அதையும் கைவிட்டுள்ளார். நிஷாந்தின் அப்பா ஆட்டோ தொழிலாளி, அவருடைய அண்ணன் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.  எந்த குற்றப்பின்னணியும் இல்லாத மீனாட்ச...