Posts

Showing posts from September 18, 2026

ஏன் தடுக்கப்பட்டார்கள் மீனாட்சியின் மக்கள்?

Image
சித்திரைப் பெருவிழாவையே அவ்வளவு பொறுப்புடன் கொண்டாடும் மக்கள் இப்போது ஏன் இவ்வளவு திணறும் நிலைக்கு ஆளானார்கள்? அத்தனை இயல்பாக நடந்திருக்க வேண்டிய குடமுழுக்கு ஏன் இவ்வளவு குளறுபடியானது? மதுரை மீனாட்சி கோவில் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்கு பின்னர் நடப்பதால் பெருந்திரளான மக்கள் வருவார்கள் என கோவிலும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் எதிர்பார்த்தன. அரசு அப்படி எதிர்பார்ப்பதும், அதற்கான ஏற்பாடுகளை செய்வதும் அவசியமானது, நியாயமானதே. ஆனால், அந்த ஏற்பாடுகளில் மக்களுக்கு எந்த இடமும் இல்லாவிட்டால் அதற்கு என்ன பொருள்? பாதுகாப்பு என்ற பெயரில் கோயிலை சுற்றியுள்ள அத்தனை வழிகளையும் தடுப்பு வைத்து அடைக்க வேண்டிய அவசியம் என்ன? எவ்வளவு கூட்டம் வந்தாலும் நெரிசலாகிற அளவுக்கு ஆபத்து கொண்டதல்ல மதுரையின் அமைப்பு. கோவிலை சுற்றி - சித்திரை வீதி - ஆவணி மூல வீதி - மாசி வீதி - மாரட் வீதி - வெளி வீதி என தாமரை இதழ்கள் போல அத்தனை அடுக்குகள் கொண்டது மதுரை நகரம். எந்த வழியில் வந்தாலும் எந்த வழியிலும் வெளியேறும் அளவுக்கு ஆயிரம் ஆண்டுக்கு முன்பே அத்தனை திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஊர் இது. தேர் வடம் போவதற்கு கூட ...