புத்தன் இப்படியும் வரலாம்

பக்கத்து வீட்டு குழந்தை
வந்து போயிருந்ததாம்.
என் அலமாரி
கலைந்து கிடந்தது.
பரவிக் கிடந்தன
என்
ஞாபகத்தின் ஆதாரங்கள்.
எனக்குள் இப்போது
சலனத்தின் சம்பாஷனைகள்.
பெருஞ்சத்தத்தில்
நிகழ்ந்தது ஒரு தியானம்.
புத்தன்
இப்படியும் வரலாம்.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

கனவின் நிலம் சோழம்!