கண்ணாடி கண்கள்

எப்போதோ
எழுதிய கவிதையின்
மூன்றாவது வரியை
படிக்கையில்
நானாக சிரித்தேன்.
யாரோ என்னை
பார்ப்பது
போலிருந்தது
திரும்பிப் பார்த்தேன்
ஜன்னலும் வாசலும் கூட சாத்தியிருந்தன.
மேசையின் மேல்
விரித்து வைத்திருந்த
மூக்குக் கண்ணாடியை
எடுத்து மாட்டினேன்
பார்த்தேன்.
இப்போது பார்க்கவில்லை
யாரும்.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...