நெளியும் துளி

வீடு முழுவதும் கிடந்த
மழைச் சுவடுகளை
அழித்த
சகுந்தலா பாட்டி,
ஜன்னலுக்குக் கீழ்
தேங்கியிருந்த சாரலை
மட்டும்
மிச்சம் வைத்திருந்தாள்
தோணும் போதெல்லாம்
போய் போய்
பார்த்துக் கொண்டிருந்தாள்
மெதுவாக
போய்ப் பார்த்தேன்
அதற்குள் இப்போது
என் முகம்
அசைந்து கொண்டிருந்தது.
சகுந்தலா பாட்டி
இறந்து
மூன்று வருடத்திற்குப் பின்பு
வந்தது
அதே மழை
அதே ஜன்னலருகில்
அதே சாரல் குளமாய்
ஆனால்
அதே நான்
அதில் தெரியவில்லை
மங்கலாக
நெளிந்து கொண்டிருந்தாள்
சகுந்தலா பாட்டி.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...