உங்களை காணவில்லை

தலை
கவிழ்ந்திருக்கிறான்
கையில் ஒன்றோ
அல்லது இரண்டுமோ
மார்புக்கருகில்
தாங்கியபடியே இருக்கின்றன
அவனை விட கனமான
செவ்வக ஒளியொன்றை.
அது அவனை
கனமிழக்கச் செய்து
இழுத்துப் போய்க் கொண்டிருந்தது
சரசரவென.
இரண்டுக்குமிடையில்
நசுங்கி விம்மிக் கொண்டிருந்த
கொஞ்சமும் கனமற்ற
அவன் வாழ்விற்காக
எந்த எச்சரிக்கை குரலாவது
வருமென காத்திருக்கும்
கணத்திற்குள் சத்தமில்லாது
காணாமல் போயிருந்தார்கள்
எல்லோரும்
ஒரு 'பீப்' ஒலியோடு.



Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...