நிசப்தத்தின் சப்தம்

பேரிரைச்சல்
பரவிப் படிந்த
பாலம்
நிசப்தமித்துக் கிடந்தது
இரவின் மத்திமத்தில்.
அதன்
விரல் கம்பிகளின் மேலிருந்து
இறங்கி வந்த
மின் மஞ்சளொளியின்
சப்தத்தில்
விழித்துக் கொண்ட
நிசப்தம்
புலர்ந்தது
பேரிரைச்சலாக.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...