நினைவுக்கு இரையாதல்

அது என்னை பின்தொடர்ந்து வருவது எனக்கு தெரியாமலில்லை

அதன் காலசைவின் ஒவ்வொரு அதிர்வையும் நான் உணராமலில்லை

அதன் வெம்மை பொதிந்த மூச்சு என்னை தீண்டாமலில்லை

இருந்தும் நான் கண்டும் காணாதது போல பாந்தமாய் என் புற்களை மேய்ந்து கொண்டிருக்கிறேன்

இப்போது என் மீது பாய்ந்தால் என்னால் தப்பிக்கவே முடியாதென தெரிந்தும்
அது வெறுமே இலைகளின் மறைவில் நின்று என்னை கவனித்துக்
கொண்டிருக்கிறது

நீளும் அந்த பின்தொடரல் நாடகத்தை உள்ளூர ரசித்தவாறே வானை அண்ணாந்து பார்த்து இளைப்பாறிக் கொண்டிருக்கையில் நிலமதிர என் கழுத்தைக் கவ்வுகிறது

வேட்டையாடப்பட்ட மிருகம் ஒன்று அந்த வேட்டைக்கு காத்திருப்பதும்
தன் உயிர் உறிஞ்சப்படுவதை அது ரசித்து அனுபவிப்பதும் நிகழ்கிறது நினைவின் கணங்களில்!





Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

கனவின் நிலம் சோழம்!