புத்தர் முகத்தில் மாற்றம்

புத்தரின் முகத்தில்
இப்போது சில மாற்றங்கள்.
விரிந்திருந்த உதடுகள்
சற்று சுருங்கியிருக்கின்றன.
நெற்றியிலும் இதே நிலை தான்.
சரி.
உதட்டை விரித்து விடலாம்
எனும் எண்ணத்தில் தொட்டால்
மூக்கில் சூடான சுவாசங்கள்.
மிரண்டு போய்
சற்று விலகி நின்று பார்த்தால்
எப்படி இருப்பாரோ அப்படியே தான்
இருக்கிறார் புத்தர்.
எனக்குத் தான் இப்படியெல்லாம்
தோன்றுகிறதா
இல்லை
இலங்கை பர்மாக்களில்
இருப்பவர்களுக்கும் தோன்றுமா.
இல்லை
அங்கு அரங்கேறுபவற்றின் பாதிப்பில்
இப்படியெல்லாம் பாவிக்கிறாரா.
பாதித்தவருக்குத் தானே தெரியும்.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...