அழியா தடங்கள்
வினைத்தொகையில்
கேள்விகள் நிகழ்கின்றன
நமக்குள் நிகழ்வனவால்.
எப்படியோ ஆற்றி விடுகின்றன
அவைகளை
உடலின் எந்த மையத்திலோ
புறப்படும் ஆழிகள்.
சரி இப்போது பிரச்சனை
கேள்விகளா ஆழிகளா
இரண்டுமில்லை
இரண்டும் அழிக்காமலிருக்கும்
தடங்களே.
தடத்திற்கென்ன அவ்வளவு
பலமா
யாருக்குத் தெரியும்
நாமா உருவாக்கினோம்
நமக்குள் நிகழ்வனவால்.
எப்படியோ ஆற்றி விடுகின்றன
அவைகளை
உடலின் எந்த மையத்திலோ
புறப்படும் ஆழிகள்.
சரி இப்போது பிரச்சனை
கேள்விகளா ஆழிகளா
இரண்டுமில்லை
இரண்டும் அழிக்காமலிருக்கும்
தடங்களே.
தடத்திற்கென்ன அவ்வளவு
பலமா
யாருக்குத் தெரியும்
நாமா உருவாக்கினோம்
Comments