செய்வதறியா செயல்

ஏன் இப்படி
எனக்கு மட்டுமே தெரிந்த
உன் ரகசிய வாசல் கதவினை
சட்டென சாத்துகிறாய்.
வருவது நான் எனத் தெரியாமலா
இல்லை
வரக்கூடாது நான் எனத் தெரிந்தா.
அந்தக் கதவின்
தொலைந்து போன சாவியை
நீயும் நானும்
ஒரே இரவிலெல்லாம் கண்டு பிடித்திடவில்லை.
தேடும் போது தெரியவும் இல்லை.
நீ தொலைத்தது
என்பதைத்தவிர வேறு நினைவும் இல்லை.
ம்ம்ம்
என்ன செய்ய
செய்வதறியா செயலோ நான்.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...