ரத்த மணம்
இறைச்சி கடைக்குள்
நுழைந்ததும்
ரத்த நாற்றத்தின்
குமட்டல்.
கழுத்துகளை
பூப்பறிப்பது போல்
பறித்துக் கொண்டிருந்தன
அந்த
பூப்படையாத விரல்கள்.
இந்த சகஜம்
சந்தேகக் கறையானது
அவன்
முண்டா பனியனின்
இருந்தவை போல்.
எல்லாம் வாங்கி முடித்து
வெளியே வந்த போது
அந்த சந்தேகக் கறையை
கரைத்துப் போயிருந்தது
ரத்த மணம்.
நுழைந்ததும்
ரத்த நாற்றத்தின்
குமட்டல்.
கழுத்துகளை
பூப்பறிப்பது போல்
பறித்துக் கொண்டிருந்தன
அந்த
பூப்படையாத விரல்கள்.
இந்த சகஜம்
சந்தேகக் கறையானது
அவன்
முண்டா பனியனின்
இருந்தவை போல்.
எல்லாம் வாங்கி முடித்து
வெளியே வந்த போது
அந்த சந்தேகக் கறையை
கரைத்துப் போயிருந்தது
ரத்த மணம்.
Comments