மீண்டும் யாரோ
யாரோக்கள் தான்.
எதுவோ இணைக்கிறது
எப்படியோ இணைகிறோம்
யார்களாகவோ பாவித்துக் கொள்கிறோம்.
யாவிற்கும்
தேடிக் கொள்கிறோம்
நியாயங்கள் மட்டும்.
அதுவே
நம்மை நாமாகவும்
வைத்துக் கொள்கிறது எதற்காகவோ.
எப்படியோ
மறுபடியும்
நாமாக நாமிருப்பது
போலில்லை
அவர்களாகவே அவர்கள்.
மீண்டும் யாரோவாகி விடுகிறார்கள்.
இந்த சக்கைகளில்
மிஞ்சும் சாற்றை
வரலாறு சொல்லுமாம்
சொல்லட்டும்..
அதற்கு அது மட்டுமே தெரியும்.
எதுவோ இணைக்கிறது
எப்படியோ இணைகிறோம்
யார்களாகவோ பாவித்துக் கொள்கிறோம்.
யாவிற்கும்
தேடிக் கொள்கிறோம்
நியாயங்கள் மட்டும்.
அதுவே
நம்மை நாமாகவும்
வைத்துக் கொள்கிறது எதற்காகவோ.
எப்படியோ
மறுபடியும்
நாமாக நாமிருப்பது
போலில்லை
அவர்களாகவே அவர்கள்.
மீண்டும் யாரோவாகி விடுகிறார்கள்.
இந்த சக்கைகளில்
மிஞ்சும் சாற்றை
வரலாறு சொல்லுமாம்
சொல்லட்டும்..
அதற்கு அது மட்டுமே தெரியும்.
Comments